நான் வீட்டில் ஒருநாளுக்கு மூன்று முறை பேட்டிங் பயிற்சியில்ஈடுபடுவேன்: ஹர்மன்பிரீத் கௌர்

Wait 5 sec.

வீட்டில் ஒருநாளுக்கு மூன்று முறை பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக வென்ற நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வதோதராவில் நேற்று (அக்டோபர் 25) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய ஹர்மன்பிரீத் கௌருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் அவர் 121 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார்.இந்த நிலையில், தான் சிறப்பாக விளையாடுவதற்கு நிறைய பயிற்சி தேவைப்படுவதாகவும், வீட்டில் ஒருநாளில் மூன்று முறை பேட்டிங் பயிற்சி மேற்கொள்வதாகவும் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: வீட்டில் நான் அதிகம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவேன். நீங்கள் அதிக நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டால், உங்களால் அதிக நம்பிக்கையுடன் இருக்க முடியும். காலை, மதியம் மற்றும் மாலை என ஒருநாளைக்கு மூன்று முறை பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவேன். எனக்கு நிறைய பேட்டிங் பயிற்சி தேவைப்படுகிறது. என்னுடைய வயதை கருத்தில்கொண்டு, நான் நிறைய உடல்தகுதியில் கவனம் செலுத்துகிறேன். மேலும், பேட்டிங்கில் முன்னேற்றம் தேவைப்படுவதால் அதிகம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுகிறேன். என்னுடைய வீட்டில் மேற்கொண்ட பயிற்சி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என்றார்.Former Indian team captain Harmanpreet Kaur has stated that she engages in batting practice three times a day at home.சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்: மைக்கேல் பிரேஸ்வெல்