நடிகை சிம்ரன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மகனின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மகனுடன் சிம்ரன் இருக்கும் படங்கள் வெளியான நிலையில், தற்போது மகனுடன் வணிகவளாகத்துக்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.மும்பையைச் சேர்ந்த நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சசிகுமாருடன் இணைந்து நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கடந்த 2003-ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பர் தீபக் என்பவரை கரம் பிடித்தார் சிம்ரன். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சிம்ரனின் மூத்த மகன் அதீப் உடன் இருக்கும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.திரையில் தனது அசத்தலான நடிப்பால் தனி முத்திரை பதித்த சிம்ரன், இன்றும் தனது ஸ்டைலாலும் அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இளமைக்கும் அழகுக்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அவரின் தோற்றம் உள்ளது.பிரபுதேவா - சிம்ரன் நடிக்கும் கமல் ஸ்ரீதேவி!Actress Simran with her son Photos go viral