நடிகர் ஜீவா நடிக்கும் 49-வது திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. நடிகர் ஜீவாவுக்கு பிளாக், தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் வெற்றிப்படமாக அமைந்ததால் இழந்த தன் மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பதால் ஜீவாவின் படங்களின் மீது எதிர்பார்ப்பும் இருக்கும். தற்போது, கிடா படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் தகப்பன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை முகமது முஸ்தஃபா இயக்க நடிகைகள் நிமிஷா சஜயன், ஏஞ்சல் மரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இது, ஜீவாவின் 49-வது திரைப்படமாக உருவாகிறது. சீரியல் டு சீரியஸ்... வாணி போஜன் பகிர்ந்த புகைப்படங்கள்!The pooja (ceremony) for the 49th film starring actor Jiiva has taken place.