இயக்குநர் மாரி செல்வராஜின் “மஞ்சணத்தி” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் ஆகிய படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக உருவாகியுள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “மஞ்சணத்தி” எனும் புதிய படத்தில் நடிகர்கள் கதிர், பிரியங்கா மோகன், கயாது லோஹர், பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் “மஞ்சணத்தி” திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, படக்குழு இன்று (அக். 29) அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேனியில் “மஞ்சணத்தி” படப்பிடிப்பை, இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கிவைத்தார். மேலும், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.திருநெல்வேலியில் இருந்து காஷ்மீர் வரை நிகழும் கதைகளத்துடன் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 90 நாள்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் 4 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருவதாகவும், இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.நான் ரசிகர் மன்றம் தொடங்கவில்லை: ஜேசன் சஞ்சய்It has been reported that the first phase of filming for director Mari Selvaraj’s movie “Manjanathi” has been completed.