நான் ரசிகர் மன்றம் தொடங்கவில்லை: ஜேசன் சஞ்சய்

Wait 5 sec.

எனக்கு ரசிகர் மன்றம் இல்லை. நான் எந்த ஒரு ரசிகர் மன்றமும் தொடங்கவில்லை. எனது பெயரில் இயங்கும் பக்கங்கள் போலியானவை என்று முதல்வர் விஜய்யின் மகனும் சிக்மா பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக ஜேசன் சஞ்சய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:”என்னுடைய அதிகாரப்பூர்வமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை முறைப்படி அறிவிக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே என்னால் நிர்வகிக்கப்படும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்குகள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.Instagram:User name - jason.sanjay_officialLink - https://www.instagram.com/jason.sanjay_official?igsh=NjcwbXRnNThtcmw0Facebook:User name - Jason SanjayLink-https://www.facebook.com/share/1DHDJ5qM5K/Twitter:User name Jason Sanjay OfficialLink-https://x.com/official_jsjஇவைதவிர, பிற டிஜிட்டல் தளங்களில் என் பெயர், புகைப்படம் அல்லது எனது அடையாளத்தைப் பயன்படுத்தி இயங்கும் மற்ற அனைத்து கணக்குகளும், பக்கங்களும் முற்றிலும் போலியானவை. எனவே, மேலே குறிப்பிடப்படாத வேறு எந்தக் கணக்குகளிலிருந்தும் வரும் பதிவுகள், கருத்துகள் (Comments), நேரடிச் செய்திகள் (Messages) அல்லது வணிகத் தொடர்புகளுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல.அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம்:நாங்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றத்தையோ, சங்கத்தையோ அல்லது சமூகக் குழுவையோ அங்கீகரிக்கவில்லை, தொடங்கவில்லை அல்லது அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது "அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம்" அல்லது "அங்கீகரிக்கப்பட்ட குழு" என்று உரிமை கோரும் எந்தவொரு குழுக்களும், பக்கங்களும் அல்லது கணக்குகளும் முற்றிலும் அதிகாரப்பூர்வமற்றவை மற்றும் அங்கீகரிக்கப்படாதவை” என்று குறிப்பிட்டுள்ளார்."I do not have a fan club. I have not started any fan club. Pages claiming to be my fan clubs are fake," stated Jason Sanjay—son of actor Vijay and director of the film *Sigma*—in an official statement.ஜேசன் சஞ்சயின் சிக்மா ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!