பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்! ரூ.14,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

Wait 5 sec.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக். 29) குஜராத் மாநிலத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை காலை அரசு முறைப் பயணமாக குஜராத் மாநிலத்துக்குச் செல்லும் நிலையில், அங்கு பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, வரும் அக். 31 ஆம் தேதி வரையிலான பிரதமர் மோடியின் 2 நாள் குஜராத் பயணத்தில் அவர் ரூ. 14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன், பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு 24 ஆவது தவணையாக ரூ. 19,000 கோடியை விடுவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பயணத்தில், சர்தார் வல்லபபாய் படேலின் 151 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரும் அக். 31 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சிலையான படேலின் சிலைக்கு மலர் மரியாதைச் செலுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது. இத்துடன், அகமதாபாத் நகரத்தில், 6 கி.மீ. மற்றும் 3.3 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டு வெவ்வேறு மெட்ரோ ரயிலின் அடுத்த கட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே, கடந்த செப்டம்பர் மாதம் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு ரூ.35,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்It has been reported that Prime Minister Narendra Modi will visit the state of Gujarat tomorrow (Oct. 29).