ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம்.பத்தாஇயக்குநர் பாலாஜி தரணிதரன் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியின் வெளியான திரைப்படம் ’பத்தா’.இதில், நடிகை லிஜோ மோல் ஜோஸ், இன்ஸ்டா பிரபலம் பாலமுருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, குழந்தை நட்சத்திரமான சாய் பிருத்விராஜ் தனது அழுத்தமான நடிப்பை வழங்கியிருந்தார். இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது. சிக்மாஇயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் நாளை (அக். 30) நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.தமன் இசையில் ஆக்ஷன் படமாக உருவான சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார்.மேலும் இந்தப் படத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜபே, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இம்மோர்டல்ஜிவி பிரகாஷ் குமாரின் இம்மோர்டல் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இம்மோர்டல் திரைப்படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருந்தார். கதாநாயகனாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார், மகி எனும் கதாபாத்திரத்திலும், கயாது லோகர் சிந்து எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.வாலிப மயக்கத்தில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே இம்மோர்டல் திரைப்படத்தின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.டார்க் ஹெவன்ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து பிரபலமான நடிகர் சித்துவின் தி டார்க் ஹெவன் திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் நாளை வெளியாகிறது.தி டார்க் ஹெவன் படத்தின் நாயகனாக நடிகர் சித்து, காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ரித்விகா, தர்ஷிகா, வேல. ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.7 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாளில் அந்த ஊரில் மர்மமான முறையில் கொலைகள் நடக்கின்றன. அது ஏன்? அதைச் சுற்றி காவல் துறை மேற்கொள்ளும் விசாரணையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.லவ் ஆல்வேஸ்கொரிய இணையத் தொடரான, ஹியர் வி கோ அகைன் என்ற தொடரைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தொடர் லவ் ஆல்வேஸ். இதில் கெளரி கிஷன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.இந்தத் தொடரை 'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். இந்த இணையத் தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.அக்காயஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதை. நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த இணையத் தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி. அக்கா தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது.டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் (Don't Trouble the Trouble)ஷஷாங்க் ஏலேட்டி இயக்கத்தில் கற்பனை மற்றும் நகைச்சுவை கலந்த கதையம்சம் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள். இந்தப் படத்தில் ஃபஹத் ஃபாசில், குழந்தை நட்சத்திரம் சாரா பலேகர், சௌரப் சச்தேவா மற்றும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.டோரதிகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ளது.இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.தி பாரடைஸ்நானியின் தி பாரடைஸ் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். தூமகேதுஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவான தூமகேது படத்தை சுதி மாடிசன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சஜின் கோபு நாயகனாவும் நிகிலா விமல் நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.Let’s take a look at which films and web series are set to be released on OTT platforms this week.டோரதி! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (அக். 23 - 29)