முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்

Wait 5 sec.

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதற்காக திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மன்னிப்பு கோரினார்.சென்னையில் கடந்த அக். 7-ல் நடைபெற்ற திமுக மகளிரணி கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் அவதூறாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகின.மேலும், முதல்வர் விஜய் குறித்து நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் அநாகரிகமாக பேசும்போது மேடையில் சென்னை மேயர் பிரியா, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இருந்தபோதிலும் அவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தவெகவினர் குற்றம் சாட்டினர்.முதல்வர் குறித்து அநாகரிகமாக பேசியதாக திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முரளிதரன் மீதும் பி-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் தவெக நிர்வாகி உதயகுமார் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, கவுன்சிலர் சுதா மற்றும் முரளிதரன் ஆகிய இருவரின் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.இந்த நிலையில், முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மனு தாக்கல் செய்திருக்கிறார். மேலும், முதல்வர் குறித்த அவதூறு பேச்சுக்கு ஏற்கெனவே மன்னிப்பு கோரியதாகவும் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், பொதுவெளியில் அவதூறாகப் பேசியதால், மன்னிப்பும் பொதுவெளியில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சுதா தீனதயாளன் அளித்த மனு மீதான தீர்ப்பையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது.ரூ. 5,000 கோடி மோசடி! சென்னையில் தொழிலதிபரை கைது செய்த கேரள காவல்துறை!DMK female councillor Sudha Dheena Dayalan apologizes for making derogatory remarks about Chief Minister Vijay