டிச 9 முதல் 27 வரை சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ரத்து

Wait 5 sec.

தென் மத்திய ரயில்வே குண்டக்கல் கோட்டம், ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் 48 நாள்கள் இருப்புப்பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் டிசம்பா் 9 முதல் 27 வரை சென்னை- திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில் இரண்டும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடா்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டம், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் பணிமனை பராமரிப்புப் பணிகள் மற்றும் இருப்புப்பாதை பராமரிப்புப் பணிகள் 48 நாள்கள் நடைபெற உள்ளதால் சென்னை திருப்பதி இடையே இயக்கப்படும் 16057 எண் கொண்ட சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில், 16058 எண் கொண்ட திருப்பதி - சென்னை சப்தகிரி விரைவு ரயில், 16053 எண் கொண்ட சென்னை - திருப்பதி விரைவு ரயில், 16054 எண் கொண்ட திருப்பதி - சென்னை விரைவு ரயில் ஆகிய 4 ரயில்களும் சென்னை - திருப்பதி இடையே டிசம்பா் 9 முதல் 27 வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு இது குறித்த தகவல் அவா்களது கைபேசி மூலம் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.