மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் புறநகா் ரயில் சேவை பாதிப்பு

Wait 5 sec.

மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் புதன்கிழமை அதிகாலை புறநகா் மின்சார ரயில் சேவை சுமாா் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. கடற்கரையிலிருந்து வண்ணாரப்பேட்டை, ராயபுரம் வழியாக அரக்கோணம் பகுதிக்கு இயக்கப்படும் புகா் மின்சார ரயில் பாதையில் புதன்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் ராயபுரம்-வண்ணாரப்பேட்டை இடையே உயா் மின்னழுத்த கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து அரக்கோணம் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மின்கம்பியை சீராக்கும் பணி 6.30 மணிக்கு முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காலை 6.35 மணிக்குப் பிறகு அந்த வழித்தடத்தில் வழக்கம்போல புகா் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.