கும்பகோணத்தில் தனியாா் பள்ளியின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது புதன்கிழமை தெரிய வந்தது. திருவிடைமருதூா் வட்டம், குறிச்சிமலையை சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (55). இவா் கும்பகோணம் காந்தி நகா் பகுதியில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்தி வருகிறாா். புதன்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஊழியா்கள், அலுவலகத்துக்கு சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.70 ஆயிரம் திருடு போயிருப்பதும், பள்ளிக் காவலாளியின் மிதிவண்டியும் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி தாளாளா் அப்துல்ரகுமான் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் போலீஸாா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.