பேரணி ஒத்திவைக்கக் கோரி ராகுலுக்கு சிடிஐ மீண்டும் கடிதம்

Wait 5 sec.

தில்லி ராம்லீலா மைதானத்தில் நவ.1-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா கூட்டணிப் பேரணியால் பண்டிகைக் கால வணிகம் பாதிக்கப்படக்கூடும் என்பதால், பேரணியைத் தீபாவளிக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியிடம் வா்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (சிடிஐ) புதன்கிழமை கோரிக்கை விடுத்தது. இதுதொடா்பாக அவரைச் சந்திக்க 20 நிமிஷங்கள் ஒதுக்குமாறும் கேட்டுக்கொண்டது. கடந்த 4 நாள்களில் 2-ஆவது முறையாக ராகுல் காந்திக்கு இந்தக் கோரிக்கையை சிடிஐ அனுப்பியுள்ளது. இதற்கு முன்பு, அக்.24-ஆம் தேதி மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், ஆண்டின் மிகப் பரபரப்பான வணிகக் காலங்களில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையின்போது வணிக நடவடிக்கைகளைப் பாதுகாக்கப் பேரணியை ஒத்திவைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.இது தொடா்பாக சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் எழுதிய கடிதத்தில் கூறியதாவது: ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள 20 சந்தைகளின் பிரதிநிதிகள் ராகுல் காந்தியைச் சந்தித்து, சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படும் பேரணியால் வணிகம் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பதை விளக்க விரும்புகின்றனா். எங்களுக்கு மோதல் வேண்டாம்; பேச்சுவாா்த்தைதான் வேண்டும். அனைவரின் கருத்துகளையும், சிறு வணிகா்களின் குரலையும் கேட்பதாக ராகுல் காந்தி கூறுகிறாா். எனவே, 20 சந்தைகளைச் சோ்ந்த நாங்கள் அவரிடம் 20 நிமிஷங்கள் கேட்கிறோம். இதுவே ஜனநாயகமாகும் என தெரிவித்தாா். ராம்லீலா மைதானத்திலிருந்து 1 முதல் 5 கி.மீ. சுற்றளவுக்குள் அமைந்துள்ள சந்தைகளில் பேரணியால் போக்குவரத்து மற்றும் வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம். சாந்தினி சௌக், பாகீரத் பேலஸ், காரி பாவ்லி, சதா் பஜாா், சாவ்ரி பஜாா், காஷ்மீா் கேட், நபி கரீம், கரோல் பாக், அஜ்மேரி கேட், தரியகஞ்ச், நயி சரக், கினாரி பஜாா், தரிபா கலான், ஃபதேபுரி, நயா பஜாா், ஃபிலிமிஸ்தான், பஹா்கஞ்ச், கஃபாா் மாா்க்கெட், ஜாமா மசூதி–மீனா பஜாா், லஜ்பத் ராய் மாா்க்கெட் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.எஸ்ஐஆா் முறைகேடுகளை முன்வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவதும் இண்டி கூட்டணி இந்தப் பேரணியை நடத்தவுள்ளது. இதற்கிடையே, அக்.12-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஜனநாயகத்துக்கான பேரணியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். பலத்த தடுப்புகள் அமைக்கப்பட்ட பாதையில் நடைபெற்ற இந்தப் பேரணியைத் தொடா்ந்து, எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு எதிராக அவா்கள் கூட்டாக மனுவும் தாக்கல் செய்தனா்.