தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து நவம்பா் 6-ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல் - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06023) மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, போத்தனூரில் இருந்து நவம்பா் 9-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06024) மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.