கடந்த 27 ஆண்டுகளாக காங்கிரஸ், ஆம் ஆத்மி செய்யாத செயலை பாஜக அரசு செய்துள்ளதாக யமுனை நதியின் சுத்தம் குறித்து அக்கட்சியின் எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இதனை, நிரூபிக்கும் வகையில் யமுனை நதியில் நீச்சலடித்து குளித்தார். இந்த விடியோவை பாஜக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.இது தொடர்பாக யமுனை நதியில் மனோஜ் திவாரி குளிக்கும் விடியோவை குறிப்பிட்டு பாஜக பதிவிட்டுள்ளதாவது:''நேரடி உண்மைச் சோதனை; கடந்த 27 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரால் செய்ய முடியாத காரியத்தை, தில்லியில் உள்ள பாஜக அரசு வெறும் இரண்டே ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளது.தில்லியில் யமுனை நதி பாதியளவுக்கும் மேலாகச் சுத்தம் செய்யப்பட்டுள்ளது, மீதமுள்ள பகுதியும் விரைவில் சுத்தம் செய்யப்படும்!பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி, யமுனை நதியில் நேரடியாக இறங்கிக் குளித்து, தில்லியில் 30 கி.மீ நீளத்திற்கு யமுனை நதி தூய்மையாக இருப்பதை நேரலையில் காட்டியுள்ளார். கேஜரிவால், நீங்கள் எப்போது வந்து இதில் குளிக்கப் போகிறீர்கள்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளது.Live Reality Test - 27 सालों में कांग्रेस और आप जो नहीं कर पाई वहीं मात्र दो साल के अंदर आधा से ज्यादा दिल्ली में यमुना जी को दिल्ली की भाजपा सरकार ने साफ कर दिया, और जो बचा है वो भी जल्दी ही साफ़ हो जाएगा!भाजपा सांसद @ManojTiwariMP जी ने तो डुबकी लगाकर 30 KM तक दिल्ली की साफ़… pic.twitter.com/Kmg676DpCE— BJP Delhi (@BJP4Delhi) October 29, 2026ஒர்னாப் புயலால் ரூ.4,600 கோடி இழப்பு, மத்திய குழு நாளை ஆய்வு! - ஆந்திர முதல்வர் அறிவிப்பு!BJP MP proves Yamuna River is clean something Congress and Aam Aadmi Party failed to achieve