தீபாவளியையொட்டி சென்னை - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் அமிா்தா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நவம்பா் 5, 12 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை - கொல்லம் அமிா்தா ரயில் (எண்: 06117) மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக நவம்பா் 6, 13 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) கொல்லத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் கொல்லம் - சென்னை அமிா்தா ரயில் (எண்: 06118) மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். இந்த ரயில் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.