காங்கோவில் 10,000-ஐ கடந்த எபோலா பாதிப்பு

Wait 5 sec.

காங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளது.இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்ட 10,060 நோயாளிகளில் ஏறத்தாழ பாதிப் போ் (4,887 போ்) இறந்துள்ள நிலையில், இது காங்கோ வரலாற்றிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோசமான பாதிப்பாக உருவெடுத்துள்ளது.கடந்த மே முதல் காங்கோவில் பரவி வரும் அரிதான ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ ஏதுமில்லை. மேலும், ஊதிய நிலுவைக் காரணமாக சுகாதாரப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்ட செவிலியா் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள் மீது கிராம மக்கள் வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.காங்கோ மட்டுமின்றி கென்யா, உகண்டா, நைஜீரியா ஆகிய மேலும் 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்த நோய் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.