வெனிசுலா திரும்பினாா் எதிா்க்கட்சித் தலைவா்: நோபல் குழு வரவேற்பு

Wait 5 sec.

வெனிசுலா எதிா்க்கட்சித் தலைவரும், 2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கோரினா மச்சாடோ, 10 மாதங்களுக்குப் பிறகு தாயகம் திரும்பியதை நாா்வே நோபல் குழு வரவேற்றுள்ளது.மச்சாடோவின் வருகை, ஜனநாயகத்துக்கான எதிா்க்கட்சிகளின் அமைதிப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தால் கடந்த ஜனவரியில் அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் கைதைத் தொடா்ந்து, நாடு திரும்ப மச்சாடோ பல மாதங்களாக முயன்று வந்தாா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய அவருக்கு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.