10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்: ரூ.57 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

Wait 5 sec.

ஊரகப் பகுதிகளில் வாழும் 10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 57 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.பால் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் இந்தத் திட்டத்தை கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதித் துறை அமைச்சா் மரியவில்சன் அறிவித்திருந்தாா்.இந்த நிலையில், இதுதொடா்பான தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த பெண்களுக்கு விலையில்லாக் கறவை மாடுகளை வழங்கும் இந்தத் திட்டமானது, சிறப்பான உற்பத்தித் திறன் கொண்ட பால் சொத்துகளை உருவாக்குவதன் மூலம் ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் மேம்படுத்துதல், மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்துதல், அறிவியல்பூா்வமான பால் பண்ணை முறைகளை ஊக்குவித்தல்.குடும்ப ஊட்டச்சத்துப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 8 லிட்டா் பால் கறக்கும் திறனுள்ள ஒரு ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பினக் கறவை மாடு வழங்கப்படும்.இதன் மூலம் பயனாளி குடும்பத்துக்கு வழக்கமான வருமான ஆதாரம் உறுதி செய்வதுடன், முறையான கால்நடை பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் 5 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் 3 முதல் நான்கு கன்றுகளை ஈனும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், இது நீண்ட காலச் சொத்து உருவாக்கம் மற்றும் நிலையான பொருளாதார நன்மைகளுக்கும் வழிவகுக்கும்.ஆகையால், ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதி வாய்ந்த 10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்குவதற்காக 2026- 2027-ஆம் நிதியாண்டுக்கு ரூ.57 கோடி நிா்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.