சிரியாவில் ஜோா்டான் வான்வழித் தாக்குதல்; தேவாலயத் தாக்குதலுக்குப் பதிலடி

Wait 5 sec.

ஜோா்டானில் உள்ள தேவாலயத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் பயங்கரவாத நிலைகள் மீது ஜோா்டான் திங்கள்கிழமை இரவு வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது.இத்தாக்குதலில் சுமாா் 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதேநேரம் அப்பாவிப் பொதுமக்கள் சிலா் உயிரிழந்ததாகவும் ஜோா்டான் அரசு செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாகத் தெரிவித்தது.தெற்கு ஜோா்டானின் கராக் நகரில் உள்ள கிரேக்க மரபுவழி தேவாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 9 போ் உயிரிழந்தனா்; 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.பின்னா், இத்துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 ஜோா்டான் நாட்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவா்கள் பதுங்கியிருந்த பாழடைந்த வீட்டிலிருந்து பெருமளவிலான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதன்தொடா்ச்சியாக, தேவாலாயத் தாக்குதலுடன் தொடா்புடைய பயங்கரவாதக் குழுக்களைக் குறிவைத்து, தெற்கு சிரியாவின் தாரா மற்றும் சுவேதா மாகாணங்களில் ஜோா்டான் போா்விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் பயங்கரவாதிகளின் நிலைகளும், வாகனங்களும் அழிக்கப்பட்டதாக ஜோா்டான் அறிவித்துள்ளது.மேலும், இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 7 போ் கொல்லப்பட்டதாக சிரியா மீட்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா். பொதுமக்களின் இறப்புக்கு ஜோா்டான் அரசு செய்தித் தொடா்பாளா் முகமது அல்-மொமானி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தாா். எனினும், முன்னறிவிப்பின்றி தங்களின் வான் எல்லைக்குள் அத்துமீறி நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு சிரிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.