நைஜீரியாவில் ஆயுதக் கும்பல் தாக்குதல்: 62 போ் பலி

Wait 5 sec.

வடகிழக்கு நைஜீரியாவின் தராபா மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 62 போ் கொல்லப்பட்டனா். 52 போ் காயமடைந்துள்ளனா்.தராபா மாகாணத்தில் உள்ள கரீம்-லாமிடோ உள்ளாட்சிப் பகுதிக்குள்பட்ட பின்னாரி கிராமத்தில், கொள்ளையா்களாகக் கருதப்படும் ஆயுதக் கும்பலால் கடந்த வெள்ளிக்கிழமை இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.இதுவரை 52 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அருகேயுள்ள நதியில் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் ஆயுதக் கும்பல்களின் தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், நைஜீரியாவில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. சட்டவிரோதச் சுரங்கங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கடத்தல் மூலம் பணம் பறிக்கும் செயல்களில் இந்தக் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.