சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

Wait 5 sec.

சென்னை: சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு, கடவுச்சீட்டு வழங்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக்கோரி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் தொடர்ந்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.28) விசாரணைக்கு வருகின்றன.அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்... * தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்குகள்* எம்எல்ஏக்கள் ராஜிநாமாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு * விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு* தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக்கோரி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சாப்பில் தொடரப்பட்ட வழக்கு (பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது)* கடவுச்சீட்டு வழங்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.Which cases are up for hearing at the Madras High Court today (Oct 28)?ஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வு