சதத்தைத் தவறவிட்ட டேரில் மிட்செல்... இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு!

Wait 5 sec.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இவ்விரு அணிகளும் மோதிய முதலிரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி வெல்லிங்டனில் இன்று (அக். 27) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் 2 ரன்களில் ஆட்டமிழக்க ஃபின் ஆலனும், டேரில் மிட்செலும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.அதிரடிய 5 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் விளாசி விக்கெட்டைப் பறிகொடுக்க, கடந்த இரண்டு போட்டிகளில் அரைசதம் விளாசிய க்ளென் பிலிப்ஸ் 17 ரன்கள் எடுத்து அவுட்டானார்.டேரில் மிட்செல், பெவோம் ஜேகப்ஸ் இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 75 ரன்கள் குவித்து அசத்தினர். டேரில் மிட்செல் 52 பந்துகளில் 5 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 89* ரன்கள் குவித்தார். பெவோன் ஜேக்கப்ஸ் 4 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 39* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. இந்திய அணித் தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் பட்டேல், நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. New Zealand (198/3 in 20 ov). Daryl Mitchell's 90 not out helps New Zealand reach a competitive total. But they will not be happy with it though as they looked good to reach 220 at one point in the innings.