ராமாயணா இசைக்காக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா வருகிற நவ. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கார்த்திக் நேத்தா எழுதிய மங்கள வண்ணமே பாடல் அண்மையில் வெளியானது. இதனைப் பாடகர்கள் ஜோத்புர்கர் மற்றும் சைந்தவி இணைந்து பாடியிருந்தனர். இப்பாடலைக் கேட்ட ரசிகர்கள் இதில் பயன்படுத்தப்பட்ட இசை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில், என்ன சொல்லப் போகிறாய்? பாடலில் ஏ. ஆர். ரஹ்மான் பயன்படுத்தியதுதான் என விமர்சித்து வருகின்றனர். Kun Faya Kun vibes for Ramayana music? A new low for AR Rahman - tired of plagiarising other's songs, so recycling his own music? https://t.co/5YaXA851bS— Sameer (@BesuraTaansane) October 26, 2026அப்பாடலின் இசையும் இதுவும் ஒன்றாக இருப்பதால் இவ்வளவு பெரிய பட்ஜெட் திரைப்படத்திற்கு தன்னுடைய பழைய பாடலிலிருந்தே ஏன் நகலெடுத்தார் என ரசிகர்கள் பதிவிட்டு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளனர். முக்கியமாக, ஹிந்தியில் இப்பாடல் மங்கல் ரங் ஹேய் என்கிற பெயரில் வெளியானது. இதனைக் கேட்ட ஹிந்தி ரசிகர்கள் இப்பாடல் ரஹ்மானின் குன் ஃபயா குன் மாதிரி இருக்கிறது என்று அவரைத் தாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. Fans are criticizing music composer A. R. Rahman for the music in Ramayana.