வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை) புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவ. 2 ஆம் தேதி மாலை ஆந்திரம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் பட்சத்தில் இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என பெயரிடப்படும். 2026 ஆம் ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 2 ஆவது புயல் இதுவாகும். இதனால் தமிழகத்தில் நவ. 2 ஆம் தேதி பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான ஒர்னாப் புயல் ஆந்திர மாநிலம் நர்சாபூர் - காக்கிநாடா இடையே உள்ள ஏனாம் அருகே அதி தீவிர புயலாக புதன்கிழமை கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. Cyclone Murasu to form in the Bay of Bengal within the next 24 hours