அடுத்து பாளையங்கோட்டையா? சேலமா? இனி முதல்வர் தன்னைத்தான் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்! உதயநிதி

Wait 5 sec.

தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதல்வர் ஓடுகிறார், மறுபுறம் கைதிகளோ சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறையிலிருந்து ராகவன் என்ற கைதி நேற்று தப்பியோடியுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த கைதி ராகவன் மீது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான வழக்குகள் உள்ளன. அன்னூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வழிப்பறி வழக்கு ஒன்றில் கைதான இவர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் 'இங்கி பிங்கி பாங்கி' போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு முதல்வரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது. தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதல்வர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர். இனி பணியிட மாற்றம், சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றால் முதல்வர் தன்னைத் தானே தான் சஸ்பெண்ட் செய்துகொள்ள வேண்டும். 'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக புழல் சிறையில் இருந்து 2 பேரும் தேனி சிறையில் இருந்து 17 பேரும் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.தோல்வி பயத்தில்…— Udhay (@Udhaystalin) October 31, 2026Udhayanidhi condemns on prisoner escaped from the Coimbatore Central Prisonவங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது 'முரசு' புயல்!