சூர்யா நடித்துள்ள சீன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று வெளியாகின்றது.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் சீன். மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக நஸ்ரியா, வில்லனாக நஸ்லென் நடித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான இரு பாடல்கள் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.சூர்யா நடிப்பில் இந்தாண்டு வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளத்திலும் அதிக திரைகளில் இப்படம் வெளியாகின்றது. இப்படத்தின், டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.பொங்கலுக்கு வெளியாகும் பா. இரஞ்சித்தின் வேட்டுவம்! The trailer and songs of Suriya's film Scene are being released today.