சென்னை: மறைந்த முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அவா், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தாா். அண்ணாநகா் தொகுதியில் 1984 முதல் 1988 வரை எம்எல்ஏவாக இருந்தாா். ஒருங்கிணைந்த அண்ணாநகா் பகுதி செயலராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளாா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளாா். அவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.மு.க.ஸ்டாலின் இரங்கல்: கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சோ.மா.ராமச்சந்திரன் மறைவெய்திய செய்தி மிகுந்த துயரமளிக்கிறது. தேநீா்க் கடை நடத்தி, தமது கடின உழைப்பால் உயா்ந்து, திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, கட்சியில் இணைந்தவா். மிசா சிறைவாசம் கண்டவா். அண்ணா, கருணாநிதி, பேராசிரியா் க.அன்பழகன் ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவா்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், உறவினா்கள் உள்ளிட்டோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.மு.க.ஸ்டாலின் அஞ்சலி: இந்த நிலையில், திமுகவின் மூத்த முன்னோடியும், அண்ணா நகர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மறைந்த சோ.மா.இராமச்சந்திரன் உடலுக்கு, சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். உடன் திமுக நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். Passing of former MLA So. Ma. Ramachandran: M.K. Stalin pays tributeதமிழக சிறைத் துறை இயக்குநராக ஏடிஜிபி சங்கா் பொறுப்பேற்பு