பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வைக் கண்டித்து சேலத்தில் திமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் தமிழக அரசைக் கண்டித்து, சேலத்தில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில், திமுக மகளிர் தொண்டரணி மாநிலச் செயலாளர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரிசி, கீரை, காய்கறிகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தவெக ஆட்சியில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாமல் தவெக அரசு ரீல்ஸ் அரசாகச் செயல்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டினர். தமிழக முழுவதும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பழிவாங்கும் நடவடிக்கையில் தமிழக வெற்றிக் கழக அரசு ஈடுபடுவதாகவும் குற்றங்களைக் களைய வேண்டும் பாலியல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதுஇந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.