பொங்கலுக்கு வெளியாகும் பா. இரஞ்சித்தின் வேட்டுவம்!

Wait 5 sec.

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் திரைப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பா. இரஞ்சித் நீண்ட காலமாக வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்ததாகத் தகவல் வெளியானாலும் மீண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இந்தப் படத்தில் ஆர்யா, விஆர் தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் டிசம்பர் மாதம் பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது.இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அறிவியல் புனைவாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.சமீபத்தில் கதாபாத்திரங்கள், கதை குறித்த விடியோ, ‘வேர்ட் ஆஃப் வேட்டுவம்’ என்கிற பெயரில் வெளியாகியது. பிரமிக்க வைக்கும் வகையில் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸில் தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில், படம் பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது.The forces of #Vettuvam are set to unleash their madness and mastery. Jan 2027 | #VettuvamFromPongal@officialneelam @LearnNteachprod @Saidevanand3 @mr_saivenkat @arya_offl @vr_dineshravi @sobhitaD @KalaiActor @mimegopi @gurusoms @actorshabeer @gvprakash @ensanthosh… pic.twitter.com/i9TIXS2jNC— pa.ranjith (@beemji) October 30, 202610 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா?Pa Ranjith Vettuvam in theatres from Pongal 2027