கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!

Wait 5 sec.

543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இன்று (அக். 28) வெளியிட்டுள்ளது.நாட்டில் புற்றுநோய் மருந்துகளின் விலையை 30% லாப வரம்புக்குள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 543 மருந்துகளின் விலையை 70% வரை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. நவ. 9 ஆம் தேதி இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வரவுள்ளது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது.தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்பக புற்றுநோய்க்கான பால்போசிக்லிப் (Palbociclib) - பழைய விலை ரூ. 40,421; புதிய விலை ரூ. 2,720.இரத்தப் புற்றுநோய்க்கான டசாடினிப் (Dasatinib) - பழைய விலை ரூ. 17,811; புதிய விலை ரூ. ரூ.1,808. தியோடெபா (Thiotepa) என்ற கீமோதெரபி ஊசி - பழைய விலை ரூ. 80,072; புதிய விலை ரூ. 7,150பெர்டுசுமாப் (Pertuzumab) என்ற புற்றுநோய் ஊசி - பழைய விலை ரூ. 94,951; புதிய விலை ரூ. 30,593அனஸ்ட்ரோசோல் (Anastrozole) - பழைய விலை ரூ. 695; புதிய விலை ரூ. 73அசாசிடிடின் (Azacitidine) - பழைய விலை ரூ. 6,337; புதிய விலை ரூ. 1,495.04பெவாசிரிசுமாப் (Bevacizumab) - பழைய விலை ரூ. 21,767.70; புதிய விலை ரூ. 5,930.13டசாடினிப் (Dasatinib) - பழைய விலை ரூ. 2,812.50; புதிய விலை ரூ. 1,085.93டெனோசுமாப் (Denosumab) - பழைய விலை ரூ. 22,031.25; புதிய விலை ரூ. 5,941என்சாலுடாமைட் (Enzalutamide) - பழைய விலை ரூ. 6,578.20; புதிய விலை ரூ. 2,232எர்லோட்டினிப் (Erlotinib) - பழைய விலை ரூ. 4,637.45; புதிய விலை ரூ. 2,008ஃபுளுடராபின் (Fludarabine) - பழைய விலை ரூ. 14,235; புதிய விலை ரூ. 2,432ஃபுல்வெஸ்ட்ரான்ட் (Fulvestrant) - பழைய விலை ரூ. 26,072.16; புதிய விலை ரூ. 5,491புதிய விலைக் குறைப்பு நவம்பர் 9 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் (Keytruda, Imjudo, Opdivo) விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட விலைப் பட்டியல்: இங்கே கிளிக் செய்யவும்பெண் அரசு ஊழியா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்Chemotherapy injection for Rs. 7,000 new price list for cancer drugs