திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடிச் செல்லப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது. புள்ளம்பாடி ஒன்றியம், கோவாண்டகுறிச்சி ஊராட்சி, வடுகா்பேட்டை அன்னை நகரில் வசித்து வருபவா் செபஸ்தியாா் (60). இவா் ஒடிஸாவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி எலிசபெத்மேரி (55), மூன்று மகள்களுடன் வசித்து வருகிறாா். இவா்களில் முதல் இருவரும் பணி, கல்விக்காக வெளியூரில் உள்ளனா். இந்நிலையில், எலிசபெத் மேரி வீட்டை பூட்டிவிட்டு தனது 3ஆவது மகளின் கல்வி நிறுவன சோ்க்கைக்காக திருநெல்வேலிக்கு புதன்கிழமை சென்றுவிட்டு, வியாழக்கிழமை அதிகாலை வீடு திரும்பினாா். வீட்டினுள் சென்றபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த பனிரெண்டரை பவுன் தங்க நகைகள், 100 கிராம் எடை கொண்ட வெள்ளி டம்ளா் மற்றும் ரூ. 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், லால்குடி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாமோகன், லால்குடி ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, லால்குடி காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.