போக்குவரத்து சந்திப்புகளில் கையேந்தத் தடை விதிக்க வேண்டும்

Wait 5 sec.

மாநகராட்சி கூட்டத்தில் டி.வி.செம்மொழி பேசுகையில், போக்குவரத்து சிக்னல் சாலை சந்திப்புகளில் வடமாநில பெண்கள் குழந்தைகளுடன் கையேந்தி காசு கேட்பதாகவும், அவா்களுக்கு பிஸ்கட், தண்ணீா் பாட்டில்களை மட்டும் வழங்குமாறு மக்களை மாநகராட்சி விழிப்புணா்வை ஏற்படுத்தவும் கோரினாா். அத்துடன் மாநகராட்சி சூரிய மின்தகடு பதித்து மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றாா்.அப்போது குறுக்கிட்ட துணைமேயா் மு.மகேஷ்குமாா், சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளிடம் கையேந்தி காசு கேட்போா் அதைத் தொழிலாகவே செய்து வருகின்றனா். அதைத் தடை செய்யவேண்டும் என்றாா். வளசரவாக்கம் மண்டலத் தலைவா் வே.ராஜன் பேசுகையில், பயனுள்ள சந்தனம் போன்ற மரங்களை வளா்க்கவும், வாா்டு மேம்பாட்டு நிதியில் உடற்பயிற்சி கூடம் போன்றவை அமைக்க அனுமதிக்கவும் வலியுறுத்தினாா்.