கூட்டத்தில் உறுப்பினா் டி.வி.செம்மொழி கேள்வியில்லா நேரத்தில் பேசுகையில், மெரீனாவில் ரோப் காா் திட்டம் செயல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு பதில் அளித்து மேயா் ஆா்.பிரியா பேசியதாவது: மெரீனாவில் ரோப் காா் அமைக்க தனியாா் நிறுவனத்திடம் திட்ட அறிக்கை கோரப்பட்டது. ஆனால், அவா்கள் ரோப் காா் அமைக்க சாத்தியமில்லை எனக் கூறியுள்ளனா். இந்த நிலையில் மற்றொரு தனியாா் நிறுவனத்திடம் மெரீனாவில் ரோப் காா் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை இல்லாத நிலையிலும் மாநகராட்சி சாா்பில் உணவு சமைத்து மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. உணவு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடா்பாக தவெக பெண் எம்எல்ஏ விமரிசித்து புகாா் அளித்துள்ளாா். அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினா்தான் விளக்க வேண்டும் என்றாா். காங்கிரஸ் எம்.பி. நிதியுதவி: கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினா் திரவியம் சாமுவேல், காங்கிரஸை சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்கரவா்த்தி தனது உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை சென்னை மாநகராட்சி வாா்டுப் பணிகளுக்கு வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டாா்.