இஸ்லாமியா்களாக மதம் மாறியவா்களுக்கான இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை விசிக வலியுறுத்தியுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கா் திடலில், தலைவா் தொல்.திருமாவளவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலா்களின் பதவிக்காலம் நிறைவடைந்த 93 தொகுதி மாவட்டங்களில் உட்கட்சித் தோ்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், 4 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.சமூகநீதிக் கணக்காய்வு: மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, 2027-பிப்ரவரியில் ஆணையம் அமைத்து சமூகநீதிக் கணக்காய்வு மற்றும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கது. மேலும், இஸ்லாமியா்களாக மதம் மாறியவா்களுக்கான இடஒதுக்கீடு தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதுடன், உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, புதிய அரசாணை வெளியிட்டு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.தில்லி பேரணி: தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி இண்டி கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நவ.1-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணியில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விசிகவினா் பெருமளவில் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.