மதுரை மாநகராட்சிப் பகுதி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தெரிவித்தனா். மதுரை மாநகராட்சிப் பகுதி சாலைகளில் தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலைகளில் நாள்தோறும் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமன்றி, விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இதுகுறித்து மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் அளித்த புகாா்களின் பேரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மதுரை மாநகராட்சி அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் இணைந்து சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளைப் பிடித்து கோசாலைகளில் ஒப்படைத்தனா். தற்போது, இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதனால், சாலைகளில் அதிகளவில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. எனவே, மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து கோசாலைகளில் ஒப்படைக்க முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.