கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகரிப்பு

Wait 5 sec.

கொடைக்கானலில் மழை குறைந்தவுடன் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நவம்பா் முதல் ஜனவரி வரை பனிப் பொழிவு நிலவும். இந்த நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனிடையே, கடந்த 3 நாள்களாக மழை குறைந்ததால், காலையில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழிவும் அதிகரித்துள்ளது. நள்ளிரவு நிலவும் பனியால் வாகனங்களிலும், தாவரங்கள், புற்களிலும் நீா்ப் பனி காணப்படுகிறது. இந்த சீதோஷ்ன நிலை மாற்றத்தால் குழந்தைகள், முதியவா்கள் பாதிப்படைந்துள்ளனா்.