சிஎஸ்கேவில் இணையும் ஹார்திக் பாண்டியா..! குறியீடுகள் சொல்வது என்ன?

Wait 5 sec.

ஐபிஎல் 2027 சீசனில் சிஎஸ்கே அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக விடியோ வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியில் புதியதாதாக பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கான புரமோஷன் விடியோவில் பல குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை கோப்பை வென்ற அணிகளாக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருக்கின்றன. இதில் மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் ஹார்திக் பாண்டியா அந்த அணியிலிருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎஸ்கே அணிக்கு எம்.எஸ். தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு ருதுராஜ் கேப்டனாக இருக்கிறார். கடந்த 3 சீசன்களாக சொதப்பியே வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகளுக்கு இடையே டிரேடிங் நடந்து வருகின்றன. இதில் ஹார்திக் பாண்டியாவை யார் எடுக்கிறார்கள் என்பது பேசுபொருளாக இருக்கிறது. இன்று சிஎஸ்கே வெளியிட்ட விடியோவில் ஒரு எண் அவுட் ஆஃப் போகஸில் காட்டப்படுகிறது. அதில் இருப்பது 33 அல்லது 53 அல்லது 55 என்று சரியாதக் தெரியவில்லை. 33 எண்ணாக இருந்தால் அது ஹார்திக் பாண்டியாவையும் 53ஆக இருந்தால் அது ஆவேஷ் கான், 55ஆக இருந்தால் வாஷிங்டன் சுந்தரையும் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான ரசிகர்கள் அந்த எண் 33 எனக் கூறி வருகிறார்கள். இதனால், ஹார்திக் சிஎஸ்கே அணியில் விளையாடுவார் எனக் கூறப்பட்டு வருகிறது.There is a hint in this video that @hardikpandya7 to @ChennaiIPL if it is real this gone be banger trade #HardikPandya #IPL2027 #CSK #WhistlePodu #MSDhoni https://t.co/tEj5DDkP0z pic.twitter.com/uSkJR1pAMA— Aaryan (@NobitaRC123) October 27, 2026சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக மோஹித் சர்மா, ஆல்பி மோர்கல் நியமனம்!CSK videos cryptic trade message Hardik Pandya is coming to Chepauk