அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரம் கையிருப்பில் உள்ளதாகவும், அதிக விலைக்கு மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (அக். 27) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பதிவிட்டுள்ளதாவது:''ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 37 முதல் 41-க்கு கொள்முதல் என்ற டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன்.இன்று டெண்டர்களைத் திறந்து பார்த்தபோது, பல விற்பனையாளர்கள் மிக அதிக விலையைக் கோரியுள்ளனர். அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரம் எங்களிடம் போதுமான அளவில் இருப்பதாலும், அடுத்த கோடை காலத்திற்காக மின்சாரம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருவதாலும், இந்த விலைகள் நியாயமற்றவை. இதற்கிடையில், வரவிருக்கும் 20 ஆண்டுகளுக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்களை நாங்கள் வெளியிடவுள்ளோம்.எனவே, இனி அதிக விலையில் எரிவாயு (மின்சார உற்பத்திக்கான எரிபொருள்) கொள்முதல் செய்யப்படமாட்டாது'' எனப் பதிவிட்டுள்ளார்.We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41. We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these… pic.twitter.com/hZ9pUqPe4j— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) October 27, 2026தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!Sufficient electricity in stock Tender for high-cost procurement cancelled minister Nirmal Kumar