தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது செஷன் விருவிருப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அணியில் 4 மாற்றங்களை செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். முதல் விக்கெட் 158 ரன்களில்தான் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்தது. மார்க்கஸ் அக்கர்மேன் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 57ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 56.2ஆவது பந்தில் டேவிட் பெடிங்ஹாம் ஆட்டமிழக்க, 56.4ஆவது பந்தில் வியான் முல்டர் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 78, அக்கர்மேன் 95, பெடிங்ஹாம் 50 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். தற்போது, களத்தில் ரியான் ரிக்கல்டன், மார்கோ யான்சென் விளையாடி வருகிறார்கள். 59 ஓவர்களில் தென்னப்பிரிக்கா 233/6 ரன்கள் எடுத்துள்ளது.மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளும் ஹேசில்வுட், கூப்பர் கானலி தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். தொடர் 1-1 என சமநிலையில் இருப்பதால் இந்தப் போட்டி மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.35 பந்துகளில் சதமடித்த அபிஷேக் சர்மா..! டி20 தொடரை வென்றது இந்தியா! Mitchell Starc takes 2 wickets in a single over! South Africa shows caution at 232/6!