நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படம் கேரளத்தில் அதிக திரைகளில் வெளியாகவுள்ளது. நடிகர் சூர்யா ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இதன் முதல் தயாரிப்பாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றியை இப்படம் மூலம் பெற வேண்டும் என்பதைத் தாண்டி புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை வெற்றியுடன் ஆரம்பிக்க வேண்டும் என சூர்யா காத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையைப் பெற்ற ஸ்ரீ கோகுலம் மூவிஸ் அதிக திரைகளில் இதனை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம். காரணம், ஆவேஷம் திரைப்படத்தால் ஜித்து மாதவன் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைவிட, கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றிகளால் சூர்யாவின் ரசிகர்களும் இப்படத்திற்காகக் காத்திருக்கின்றனர். நாயகி நஸ்ரியா இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் உள்பட படக்குழுவினர் பலரும் மலையாளிகள் என்பதால் மலையாளத் திரைப்படம் வெளியாவதற்கு இணையான திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். மட்டஞ்சேரி மாஃபியா திரைப்படத்திற்குத் தயாராகும் ஆசிஃப் அலி! The film scene, starring actor Suriya, is set to be released across a large number of screens in Kerala.