ரேஜ் பெய்ட்: லபுஷேன் விக்கெட்டை கொண்டாட பிட்சை தாண்டிய ப்ரீட்ஸ்கே..! வைரல் விடியோ!

Wait 5 sec.

ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை கொண்டாடும் விதமாக, அவரது கோபத்தைத் தூண்டும்படி தென்னாப்பிரிக்க வீரர் மேத்திவ் பிரீட்ஸ்கி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டவுனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீசியது. முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிர்க்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 330/4 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் நடந்த கொண்டாட்டம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை கொண்டாடும் விதமாக தென்னாப்பிரிக்க வீரர் மேத்திவ் பிரீட்ஸ்கி பிட்சை தாண்டி அவரது முக்கத்துக்கு நேராக கொண்டாடியது வைரலாகி வருகிறது. மார்னஸ் லபுஷேனின் கோபத்தை தூண்டும் விதமாக அவர் செய்த செயல் இணையத்தில் மீமாக மாறியுள்ளது. ரேஜ் பெயிட் (Rage bait) என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென இணையவாசிகள் கூறி வருகிறார்கள். ரேஜ் பெயிட் என்பது எதிரில் இருப்பவரை கோபப்படுத்தும்படி பதிவிடுவதைக் குறிக்கும் ஜென்ஸிக்களின் வார்த்தையாக இருக்கிறது. ஆக்ஸ்போர்டின் 2025ஆம் ஆண்டின் சிறந்த சொல் என்பதாக இந்த வார்த்தை பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது. ஐசிசி நடத்தை விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்படும். மேத்திவ் ப்ரீட்ஸிக்கேவுக்கு இன்னும் எந்தவிதமான அபராதமும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Wait for it #SAvAUS pic.twitter.com/2NS83O1FJZ— FanCode (@FanCode) October 28, 2026Breetzke is an elite rage baiter/rattler #SAvsAUS https://t.co/q6ub0h8Dil— Ⓜ️️ #XoogGLINEOS (@LUHSJR) October 28, 2026ஐசிசி தரவரிசை: டெஸ்ட்டில் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மார்கோ யான்சென்!Rage bait or Meme Material: Breetzke's Leap Across Pitch Goes Viral After Marnus Labuschagne’s Duck wicket celebration