கச்சா எண்ணெய் விலை 114 டாலர்! ஆனாலும் உயர்ந்து முடிந்த பங்குச்சந்தை! காரணம்?

Wait 5 sec.

நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இன்று (அக். 29) உயர்வுடன் நிறைவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,268.47 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை முதலே ஏற்றம் கண்டு வந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 905.01 புள்ளிகள் உயர்ந்து 74,151.04 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 237.90 புள்ளிகள் உயர்ந்து 22,936.75 புள்ளிகளில் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய 2 குறியீடுகளும் 1% உயர்ந்தன. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.98 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.93 சதவீதமும் உயர்ந்தன.துறை சார்ந்த குறியீடுகளில், நிஃப்டி ரியல் எஸ்டேட் பங்குகள் 2.7% என அதிக லாபம் பெற்றன. எப்எம்சிஜி 2.3% லாபம் அடைந்தது. அதேநேரத்தில் ஆட்டோ பங்குகள் 0.24% சரிந்தன. மற்ற அனைத்து துறை பங்குகளும் லாபம் பெற்றுள்ளன. சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹெச்டிஎப்சி, மாருதி, டெக் மஹிந்திரா, ட்ரெண்ட் ஆகிய 4 பங்குகள் மட்டும் சரிந்தும் மற்ற பங்குகள் அனைத்தும் உயர்ந்தும் முடிந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.26 ஆக முடிந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் நேற்று 115 டாலரிலிருந்து இன்று 114 டாலராகக் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகம் என்று நிலையிலும் நேற்றைவிட இன்று குறைந்துள்ளதால் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றுகூறப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாதது, இன்று அதிக பங்குகள் வாங்கப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தை நேர்மறையுடன் முடிந்ததாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள். Stock Market Close: Sensex ends 905 pts higher, Nifty 50 at 22,936; Realty top sectoral gainerரயிலில் ரீல்ஸ் பார்க்கிறார்களா? எங்கே புகார் செய்ய வேண்டும்?