கதாநாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்? தயாரிப்பாளர் இவரா?

Wait 5 sec.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முதல்வர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படம் மூலம் இயக்குநராகத் திரைத்துறைக்கு அறிமுகமானார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், நடிகராகும் திட்டத்தில் ஜேசன் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் அட்லி தயாரிப்பில் கதாநாயகனாக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தை டியூட் திரைப்படத்தை இயக்கி கவனம் பெற்ற கீர்த்திஸ்வரன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.தற்போது, கீர்த்திஸ்வரன் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பென்ஸ் சிறப்பு போஸ்டர் வெளியீடு!Reports indicate that director Jason Sanjay is set to make his debut as a lead actor.