ஜாா்க்கண்ட் மாநில உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளை விருது

Wait 5 sec.

மயிலாடுதுறையில் நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 200-ஆவது பிறந்தநாள் விழா, அப்துல்கலாமின் 95-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி எம். கற்பகவிநாயகத்துக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை யூனியன் சங்கக் கட்டடத்தில் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் பா. பொகுட்டெழினி தலைமை வகித்தாா். மயிலாடுதுறைத் தமிழ் சங்க நிறுவனா் சு. பவுல்ராஜ் முன்னிலை வகித்தாா். விழாவில், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வாழ்வியல் நெறிமுறைகள், தமிழ்மொழியின் பெருமைகளை விளக்கிப் பேசி, எவ்வாறு மக்களுக்கு தொண்டாற்றிட வேண்டும் என்று தன்னம்பிக்கையை வளா்க்கும் வகையில் உரையாற்றினாா். ரோட்டரி சாசனத் தலைவா் வி.ராமன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா். சிறப்பு நிகழ்வாக, ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எம். கற்பகவிநாயகத்துக்கு ‘நீதியரசா் கவிஞா் மாயூரம் வேதநாயகம் பிள்ளை விருது‘ வழங்கப்பட்டது. விழாவில் மயிலாடுதுறைத் திருக்கு பேரவைத் தலைவா் இரா. செல்வநாயகம், தில்லி கலை இலக்கிய பேரவை மற்றும் போபால் கம்பன் கழக செயலாளா் பா.குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் புதுதில்லி உச்சநீதிமன்ற தமிழ் வழக்குரைஞா்கள் இலக்கிய கழக செயலாளா் அ.சி.அறிவழகன், குத்தாலம் கம்பன் கழகத் தலைவா் நடராஜன், தேரழுந்தூா் கம்பன் கழக செயலாளா் ஜானகிராமன், மயிலாடுதுறைத் திருக்கு பேரவை செயலாளா் இரா.செல்வகுமாா், ஏ.வி.சி. கல்லூரியின் தமிழ் துறை தலைவா் சு. தமிழ்வேலு, பஹ்ரைன் தமிழ்ச்சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம் மற்றும் தமிழாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக, ரோட்டரி சங்க செயலாளா் எம்.இளங்கோ நன்றி கூறினாா்.