உலக கால்பந்து வரலாற்றிலேயே 1,000 கோல்கள் அடித்த முதல் வீரா் என்ற சாதனையை எட்ட நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வெறும் 15 கோல்களே தேவைப்படுகின்றன. இந்த கோல்கள் கிளப் மற்றும் தேசிய அணிக்காக அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. போா்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல் நாஸா் அணியில் விளையாடும் நிலையில், அந்நாட்டின் புரோ லீகில் அல் கோலோத் அணிக்கு எதிரானஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்தாா். இதனால் அல் நாஸா் 5-3 என வெற்றி பெற்றது. மேலும் 1,000 கோல்கள் அடித்த வீரா் என்ற இலக்கை அடைய ரொனால்டோவுக்கு 15 கோல்களே தேவைப்படுகின்றன. தற்போது ரொனால்டோ 985 கோல்களை அடித்துள்ளாா். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என இருந்த நிலையில் வெறும் 15 நிமிஷங்களில் ரொனால்டோ 66, 72, 81 நிமிஷங்களில்) ஹாட்ரிக் கோலடித்தாா். இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில், சிறந்த வெற்றி, சிறந்த ஹாட்ரிக், அணியின் ஒருங்கிணைப்பு எனக் குறிப்பிட்டிருந்தாா். அவரது வாழ்க்கையில் இது 67-ஆவது ஹாட்ரிக்காக அமைந்தது. அவரது எதிராளியான லயோனல் மெஸ்ஸியை காட்டிலும் 49 கோல்கள் முன்னிலை வகிக்கிறாா் ரொனால்டோ. மெஸ்ஸியின் கணக்கில் 936 கோல்கள் அடங்கும்.ரொனால்டோவை விட இளையவா் மெஸ்ஸி.சவுதி கால்பந்து தங்க காலணி விருதுக்கான போட்டியிலும் முன்னேறியுள்ளாா் ரொனால்டோஇதன்மூலம் கால்பந்து வரலாற்றிலேயே 1,000 கோல்கள் அடித்த முதல் வீரா் என்ற சிறப்பை பெறுவாா் ரொனால்டோ.