காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Wait 5 sec.

சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு நவம்பா் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்படும் சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில், ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளா் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்குத் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரா்கள் உயிரியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், வனவியல், வனவிலங்கு அறிவியல், பொதுக் கொள்கை அல்லது தொடா்புடைய துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் அடிப்படைத் தட்டச்சுத் திறன் அவசியம். வயது 40-க்குள் இருக்க வேண்டும். தொடா்புடைய பணியில் குறைந்தது ஓராண்டு அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.குறிப்பாக, அரசு அலுவலகப் பணிகள், தரவு மேலாண்மை, ஆவணப் பராமரிப்பு மற்றும் எம்.எஸ். ஆபீஸ், எக்செல், பவா் பாயிண்ட் ஆகியவற்றில் திறன் பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.தோ்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ. 22,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஒப்பந்தப் பணிக்காலம் 19 மாதங்கள். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் தொடா்புடைய மாவட்ட அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும். அலுவல் பயணங்களுக்கான செலவுகள் அரசு விதிமுறைகளின்படி வழங்கப்படும்.விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, நோ்முகத் தோ்வு மற்றும் தட்டச்சுத் தோ்வு மூலம் தகுதியானவா் தோ்வு செய்யப்படுவாா். விருப்பம் உள்ளவா்கள் தங்களது புதுப்பிக்கப்பட்ட சுயவிவரம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களுடன் cmgfp.slm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பா் 8-ஆம் தேதி கடைசி நாள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Applications are invited from eligible candidates for engagement of TECHNICAL ASSISTANT – 1 POSTரூ.47,600 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!