கைதிகள் தப்பியோட்டம், ஆவின் பொருள் விலை உயர்வு, எதிர்க்கட்சியினர் கைது உள்ளிட்டவை குறித்து தவெக அரசு மீது திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கடும் விமர்சனத்தை முன்வைத்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "ஒரே நாளில் 17 கைதிகள் தப்பித்துச் செல்லக்கூடிய ஒரு அவலமான சூழ்நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது காவல்துறை, ஆளும் கட்சிக்கு குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள் சொல்ல வேண்டிய பதிலை காவல்துறையினர் சொல்கிறார்கள். விலைவாசி உயர்வு இருக்கும் நிலையில் ஆவின் பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். ஆட்சிக்கு நேரடியாக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய எதுவுமே இந்த ஆட்சியில் கட்டுப்பாட்டில் இல்லை. திமுக ஆட்சியில் நிறைவடைந்த திட்டங்களைத் திறந்து வைத்துவிட்டு, நான்கு மாதங்களில் செய்து முடித்ததாக தவெக அரசு ரீல்ஸ் வெளியிடுகிறது. தவெகவின் ஐடி விங் -காக காவல்துறை செயல்படுகிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 50 பேர் வரையில் கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர். எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதில் இருக்கும் ஆர்வம், குற்றம் செய்பவர்களை கைது செய்வதில் இல்லை. பஞ்ச் டயலாக் பேச மட்டுமே முதல்வர் வாய் திறக்கிறார். சட்டப்பேரவை உள்ளிட்ட மற்ற நேரங்களில் எதற்கும் விளக்கம் தருவதில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திக்காத முதல்வர்" என்று பேசினார். CM vijay opens his mouth only to deliver punch dialogues: Kanimozhiஇந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!