இஸ்ரேலின் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக். 28) நடைபெற்று வரும் நிலையில், பதிவான வாக்குகளில் 50.1 சதவிகித வாக்குகள் தற்போதுவரை எண்ணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில், பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சியின் தலைமையிலான கூட்டணி 56 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக, அந்நாட்டின் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் 49 இடங்களிலும், அரபு கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 27) இரவு வாக்குப் பதிவுகளுக்குப் பின்பு வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் நெதன்யாகு மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட் ஆகிய இருவரின் கூட்டணிகளும் பெரும்பான்மையான இடங்களைப் பெற மாட்டார்கள் எனக் கூறப்பட்டது.இஸ்ரேலிய அரசியலைப்பின்படி ஆட்சி அமைக்க 61 இடங்களைப் பெறுவது கட்டாயமாகும். இதுவரை எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையைப் பெற்று தனித்து ஆட்சியமைத்தது இல்லை எனக் கூறப்படும் நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்து வந்துள்ளன. ஏற்கெனவே, காஸா மற்றும் ஈரான் மீதான நெதன்யாகு தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேலியர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!In the vote count for Israel's general election, the coalition led by Prime Minister Benjamin Netanyahu is reported to be in the lead.