புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்பு நிவாரணம் குறித்த அறிக்கை வந்த பின் நிவாரணம் குறித்த நடவடிக்கை எடுத்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் ஏனாம் புயல் பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை வந்த பிறகு, அது தொடர்பாக தகுந்த முடிவெடுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் புயல் பாதிப்பு நிலவும் பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, அவர்களுக்குத் தேவையான உணவு வழங்குவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் தொடர்ந்து செய்து கொடுத்து வருகிறார்கள். பாதுகாப்புகள் குறித்த கணக்கெடுப்பு வந்த பிறகு நிவாரணம் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.கிராம பஞ்சாயத்து தேர்தல்! லடாக்கில் தீவிரமடையும் முன்னேற்பாடுகள்!