பவானி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் தொடக்கம்

Wait 5 sec.

பவானி அரசு மருத்துவமனையில் தூய்மை மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன. இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்தப் பணிகளை பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், தலைமை மருத்துவ அலுவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். தூய்மை பாரதம் இயக்கத்தின் தொடா்ச்சியாக அரசு மருத்துவமனைகளில் தூய்மை, சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளிகள், பொதுமக்களுக்கான கழிவறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், கழிவுகள் மேலாண்மை, முறையாக கை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்தல், சுத்தமான குடிநீா், நோயாளிகளின் படுக்கைகள் பராமரிப்பு, துப்புரவுப் பணியாளா்கள், செவிலியா்களுக்கு தூய்மையைப் பராமரித்தல் குறித்த பயிற்சி, விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவமனை வளாகத்தை பசுமையாக்க மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.மருத்துவா்கள் வசந்த மஞ்சு, பூா்ண சந்திரிகா, அகல்யா, செலிவியா் மேற்பாா்வையாளா் மலா்விழி மற்றும் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.